Showing posts with label மூட நம்பிக்கை. Show all posts
Showing posts with label மூட நம்பிக்கை. Show all posts

Monday, March 11, 2013

லட்சுமி வெடி...

கடவுள் படங்களை நாத்திகர்கள் கொளுத்தினார் அலறும் பக்தர்கள், கடவுள் படம் போட்ட பட்டாசுகளைக் கொளுத்தலாமா?

Tuesday, July 8, 2008

மணப்பெண்ணுக்கு மூல நட்சத்திரம் இருந்தா...

மணப்பெண்ணுக்கு மூல நட்சத்திரம் இருந்தா மாமனாருக்கு ஆகாதாம்...
ஏன்டா! மணமகனுக்கு இருந்தா மாமியாருக்கு ஒன்னும் ஆகாதாடான்னா... ஆகாதுன்றான். இவனுகளுக்கு பெண்கள் அவ்வளவு இளக்காரமா?

Thursday, June 19, 2008

கடவுள் செயல்...

குழந்தை பிறப்பது கடவுள் செயல் என்றால் ஆண், பெண் உறவு எதற்காக? திருமணம் எதற்காக?

Thursday, June 12, 2008

'மின்'னாத்தா...!?

செய்தி: விழுப்புரம் அருகே கோயில் பந்தலில் மின்சாரம் தாக்கி ஆறு பேர் பலி....

சிந்தனை: பலியானோர்க்கு ஆழ்ந்த இரங்கல்...
அம்மையாக இருந்தாலும் அம்மனிடம் முறையிடலாம்...
மின்சாரத்துக்குத் தான் கடவுள் கண்டுபிடிக்கப்படவில்லையே! யாருகிட்ட முறைடுறது.....

Monday, May 26, 2008

வாஸ்து அறிவியலா?

வாஸ்து அறிவியல் தான் என்பவர்கள் இடி விழுந்தாலோ, நில நடுக்கத்தாலோ பாதிப்படையாத வீடுகளை கட்டித் தருவார்களா?


Thursday, May 15, 2008

மலைச்சாமி கோவிச்சுக்குமா?

செய்தி: சீனாவில் நிலநடுக்கத்தால் 8500 பேருக்கு மேல் பலி.
சிந்தனை: ஏம்ப்பா! இவ்வளவு பேரு செத்துப் போயிருக்காங்களே. இந்தப் பணக்காரக் கோயில்களெல்லாம் ஒரு தொகையைக் குடுக்கலாம்ல.. என்ன அந்த மலைச்சாமி கோவிச்சுக்குமா?

காரும் சேரும் போதுமா?


செய்தி: திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. லட்சம் செலவில் தங்க சிம்மாசனம் காணிக்கை.

சிந்தனை:
போன மாதந்தான் சென்னையில் கல்யானம் பண்ணி வச்சா. அப்புறம் இன்னோவா கார் கொடுத்தான்.. இப்ப சேர்...
ஏப்பா கல்யானம் பண்ணிக்கிட்ட கடவுளுக்கு காரும் சேரும் போதுமா?
கட்டிலும் மெத்தையும் செஞ்சு குடுங்கப்பா.....!

Tuesday, May 13, 2008

அறிவுக்கும் எட்டாதது

கடவுள் எத்தகைய அறிவுக்கும் எட்டாதது...

ஏப்பா! நானும் அதைத்தானே சொல்றேன்.
அறிவுக்கு எட்டாததுன்னா அறிவுப்பூர்வமானதில்லன்னு தானே அர்த்தம்
நீ ஏமாளிகளுக்காகச் சொல்ற..
நான் ஏமாறாம இருக்கச் சொல்றேன்.

Sunday, May 11, 2008

அட்சய திருதியை

செய்தி: அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் செல்வம் கொழிக்கும்.
சிந்தனை: ஏம்ப்பா! இது உண்மையா இருந்தா இந்தியா ஏன் 17,94,700 கோடி கடன்பட்டு இருக்கணும்?

பேசாம மத்திய அரசு இந்த நாளில் தங்கம் வாங்கி ஒரே ஆண்டில் கடனை அடைத்து விடலாமே!

Saturday, May 10, 2008

எந்த நேரம்?????

செய்தி: நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டி சுகப் பிரசவத்திலும் அறுவை மேற்கொள்ள மருத்துவர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள்.
சிந்தனை: ஏம்ப்பா! நீ குழந்தை பிறக்கிறதாச் சொல்றது எந்த நேரம்?
குழந்தை வெளிய தலைகாட்ற நேரமா?
இல்லன்னா.. முழுசா வெளிய வந்து விழுகிற நேரமா?
இல்லன்னா... தொப்புள் கொடி அறுக்கிற நேரமா?
அதுவும் இல்லாட்டி மருத்துவர் சொல்லுவாரே அந்த நேரமா?

எந்த நேரம்?????